அறிமுகம் - இலங்கை முன்னாள் முஸ்லிம்கள்

இஸ்லாம் இறைவனிடமிருந்து வந்த இறுதி வழிகாட்டல், முஹமது இறைவனின் இறுதித் தூதர், குர்ஆன் இறைவேதம், முஹமது நமது உயிரினும் மேலானவர், உத்தமமானவர் போன்ற நம்பிக்கைகள் முஸ்லிம்களாக பிறந்த எமக்கு சிறுவயது முதலே ஊட்டப்பட்டன. எனினும் கல்வி வளர்ச்சி, சிந்தனை விருத்தி, பரந்துபட்ட வாசிப்பு ஆகியவற்றின் தாக்கம் காரணமாக, இஸ்லாம் குறித்து அதன் மூலாதாரங்களில் இருந்தே ஆராய்ந்த பொழுது, அவற்றில் இறைவேதம் என்பதற்குப் பொருத்தமற்ற பல அபத்தங்களும், அறிவியலுக்கும், மனித வாழ்க்கைக்கும் பொருந்தத தன்மைகளும் காணப்பட்டதனை தெளிவாக உணர முடிந்தது.


உயிரினும் மேலானவர், உத்தமமானவர், இறைவனின் இறுதித் தூதர் என்று போதிக்கப்பட்ட முஹமது அவர்களின் வாழ்க்கையை இஸ்லாத்தின் மூலாதாரங்களில் ஒன்றான ஹதீஸ்களின் அடிப்படையில், குறிப்பாக புஹாரி, முஸ்லிம் ஆகியவற்றில் இருந்து கற்ற பொழுது, அடிப்படை மனித நாகரீகம், மனிதநேயம் மற்றும் ஒழுக்க விழுமியங்களுக்கு முரணான ஒரு வாழ்க்கையை அவர் வாழ்ந்து இருந்ததை தெளிவாக உணரக் கூடியதாக இருந்தது.

மேற்படி காரணங்களாலும், மேலும் இவை போன்ற தரங்களில் உள்ள பல்வேறு காரணங்களாலும் நாம் தனி நபர்களாக இஸ்லாத்தை விட்டும் வெளியேறினோம். இஸ்லாத்தில் இருந்து வெளியேறி, ஒரு முன்னாள் முஸ்லிமாக சமூகத்தில் அறியப்படுவது இலகுவில் சாத்தியமான ஒன்றாக இருக்காத காரணத்தால், எமது தனிப்பட்ட பாதுகாப்புகளை கருத்தில் கொண்டு வெளிப்படையாக இயங்குவதில் நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொண்டோம்.பல்வவேறு தளங்களின் மூலமும், நண்பர்கள் மூலமும் ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டு ஒரு அமைப்பாக இயங்க முன்வந்தோம்.

நம்மைப் போன்ற சிந்தனை உள்ள சுதந்திர சிந்தனையாளர்கள் மேலும் இருக்கின்றார்கள், அவர்கள் இலைமறை காயாக, அமைதியாக இருக்கின்றார்கள் என்பதை எமது சொந்த அனுபவங்களை அடிப்படையாக வைத்து அறிந்துகொள்ள முடிவதால், எம்மைப் போன்று சிந்தனா ரீதியான மாற்றம் காரணமாக இஸ்லாத்தை விட்டு வெளியேறிய, வெளியேறத் துடிக்கும் அனைவரையும் இணைக்கும் இணைப்பாக இந்த அமைப்பை ஓர் ஆரம்பப் படியாக நிறுவியுள்ளோம்.

நாம் மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதனால் எமது பணிகள், நடவடிக்கைகள் ஆகியவை பற்றி அவ்வப்பொழுது இங்கே பதிவேற்றங்கள் மேற்கொள்ளப்படும். அத்துடன் இந்த அறிமுகப் பகுதியிலும் மேம்படுத்தல்கள், மாறுதல்கள் மேற்கொள்ளப் படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

6 comments:

  1. வாழ்துகள் தொடரட்டும் சமூக சிந்தனைமாற்று, பணி கடவுள் சிந்தனைகளை மாற்றி மனித நேய சிந்தனை செயல்களை விதைத்திடுவோம்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் தோழர்களே

    ReplyDelete
  3. வாழ்த்து க்கள்தோழர்தங்களின்பணிசிறக்கட்டும்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் அத்தோடு எனது (முன்னால்) கிருஸ்துவ நன்பர்கள் பலரும் தங்களின் ஒன்று கூடலில் கலந்து கொள்ள விரும்புகிறார்கள்.காரணம் பைபிளை ஆழமாக ஆராந்த போது ஒன்றுக்கொன்று முரண்பாடாகவும்,படுஆபாசமாகவும்,அபத்தமாதாகவும்,மனித வாழ்க்கைக்கு ஒவ்வாத அனேக சிந்தனைகள் அதில் இருப்பாலும் அவர்கள் கிருஸ்துவத்தை வெறுத்து இருக்கிறார்கள்.தயவு கூர்ந்து அவர்களுக்கும் வாய்பழிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி.(திகதியை குறிப்பிட்டு அறிவிக்கவும்)

    ReplyDelete